புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
சிலாபத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சரவை மாற்றம் என்பது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் சாதாரண ஒன்று.
எனினும் தற்போது நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்படும் பிரதமர் அதிகாரத்துடன் காணப்படும் ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு இணக்க மறுக்கிறார்.
இவ்வாறான இருவரால் நாட்டை வழி நடத்த முடியாது.
இவை நாட்டுக்கே பாதிப்பு என்று மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

