அமைச்சரவை மாற்றமே அன்றி அரசாங்க மாற்றமே வேண்டும் – சந்திரசிறி கஜதீர

408 0

அரசாங்க மற்றமே நாட்டிற்கான தேவையே அன்றி அமைச்சரவை மாற்றமல்லவென ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள கஜதீர, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தபடவேண்டிய நிலையில் அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்வதனால் திருப்திகொள்ள முடியாது என குறிப்பிட்டார்.