வடகொரியாவின் குறுந்தூர ஏவுகணை சோதனை வெற்றி

328 0

வடகொரியாவின் குறுந்தூர ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை தொடர்ந்தும் விதித்து வருகின்றன.

இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்து இருந்தது.

இந்த ஏவுகணை 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.