அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருத்துவமனைகளில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் தலைவரை கைதுசெய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுதல் உள்ளிட்ட நான்கு பிரச்சினைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இன்று காலை எட்டுமணிக்கு ஆரம்பமான இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை காலை எட்டு மணிவரை தொடரவுள்ளது.
இந்த பணிப் புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் பல மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகளின் செயற்பாடுகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
எவ்வாறெனினும், ரிஜ்வே சிறுவர் மருத்துவமனை, காசல் வீதி காசல் மருத்துவமனை மஹாரகம புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் பணி நிறுத்தப் போராட்டம் இடம்பெறவில்லை எனவும் மருத்துவமனையின் அவசர பிரிவுகளின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றுவருவதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.

