கடந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரவித்துள்ளார்.
30 வருட யுத்தத்தை நிறைவு செய்த அவர்கள் எந்தவகையிலும் மறக்க முடியாதவர்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மஹரகம இசிபதனாராம விகாரையில் இடம்பெற்ற இராணுவ வீரர்கள் நினைவு தினத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தம்முடிவடைந்து 8 வருட நினைவை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

