சர்வதேச நாடுகளை போன்றே இலங்கையில் தொழில் வல்லுனர்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால இதனை தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ துறையில் விசேட மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன் எண்ணிக்கை 50 சதவீதமாக காணப்படுகின்றது.
எனினும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுகின்ற மருத்துவத் துறை சார்ந்த மாணவர்கள், அரசாங்கத்திற்கும் தெரியாமல் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவுஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

