பிலியந்தலை தாக்குதல் – மூன்று பேர் கைது

352 0

பிலியந்தலையில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்றைய தினம் மிரிஹான காவதுறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

44 வயதான பெண் ஒருவரும் 22 வயதான இரண்டு இளைஞர்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை தாக்குதலுடன் தெடர்புடைய பிரதான சந்தேகத்திற்குரிவருக்கு உதவி செய்தமை, தலைமறைவாக்கியமை, பொய்யான தகவல்கள் வழங்கியமை, சந்தேகத்திற்குரியவருக்கு பாதுகாப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரியவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.