வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது அமைச்சிற்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்தமையால், இருவர் உயிரிழந்ததோடு, 21 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அக் கட்டடத்தின் உரிமையாளர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்காலம் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இன்றும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

