ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கைது

319 0

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சீனப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் வசம் இருந்து 24,500 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றின் பெறுமதி 37 இலட்சம் இலங்கை ரூபாவுக்கும் அதிகம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தமையும், அவர் சவுதி அரேபிய நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றுவதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.