உந்துருளி விபத்தில் 14 வயதுடைய மாணவர் ஒருவர் பலி

345 0

மஹியங்கனை – கொடிகமுவ சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 14 வயதுடைய மாணவர் பயணித்துள்ள உந்துருளி, வீதியில் உள்ள மரம் ஒன்றுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை – கந்தகெடிய பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரத்துடன் மோதுண்டு, இதற்கு முன்னரும் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கந்தகெடிய காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.