அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை

210 0

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னித்­துள்­ளனர். குறிப்­பாக நிதி அமைச்சு, வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்­குகள் அமைச்சு உள்­ளிட்ட முக்­கிய அமைச்­சுக்கள் பல­வற்­றிலும் இந்த மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் சட்ட ஒழுங்­குகள் அமைச்சின் பொறுப்­புக்­களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு வழங்­கு­வ­தற்­கான எதிர்ப்­பார்ப்­புகள் ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ள­தா­கவும் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார். இத­ன­டிப்­ப­டையில் நாளை திங்கட் கிழமை ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் அமைச்­ச­ரவை மாற்றம் குறித்து தீர்­மா­னிக்­கப்­படும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா செல்­வ­தற்கு முன்னர்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதன் போது   குறிப்­பிட்ட சில முக்­கிய அமைச்­சுக்­களில்  மாற்­றங்கள் கொண்­டு­வ­ரு­வ­தற்கும் புதிய அமைச்­சர்கள் சிலரை நிய­மிக்­கவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசின் பொதுச் செய­லா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகம் தொண்­டமான் மற்றும் ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்த ஆகியோர் புதிய அமைச்சு பத­வி­க­ளுக்­காக உள்­வாங்­கப்­பட உள்­ளனர்.

ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்சு பத­வி­களில் மாற்றம் ஏற்­ப­டுத்­து­வதில் சிக்கல் நிலை காணப்­ப­டு­கின்­றது.  ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் தற்­போது வகிக்கும் அமைச்சு பத­வி­களை சுதந்­திர கட்­சிக்கு வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பை தெரி­விக்­கின்­றனர். இதனால் அமைச்­ச­ரவை மாற்றம் தொடர்பில்  ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன.

எவ்வாறாயினும் கடந்த 2015 ஓகஸ்ட் மாதம் பதவியேற்ற கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை முதல் முறையாக மறுசீரமைக்கப்பட உள்ளமை  குறிப்பிடத்தக்கது.