மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களும் 12 சந்தேக நபர்களும் கைது

215 0
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்காக கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட  12 பேரை இன்று (21) ஆம் திகதி கல்லாறு பிரதேசத்தில் தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இம் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான   மகேஸ் வெலிகண்னவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலை  தொடர்ந்து தருமபுரம் பொலிஸார் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்களையும் அத்துடன் மணல் ஏற்றிச் சென்ற   வாகனங்களும் கைது செய்தனர்.
மணல் கொள்ளையர்களில் கல்லாறு காட்டுப்பகுதியில் இருந்து பிரமந்தனாறு காட்டுப்பகுதியினை வந்தடையும் ஆற்றில் இருந்து இரகசிய முறையில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம் பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்கென கூறியே நீண்டகாலமாக இம் மணல் வியாபாரம் நடை பெற்றதாக மேலும் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை  கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில்  முன்னிலையப்படுத்துவதற்ன சட்ட சடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான   மகேஸ் வெலிகண்ன தருமபுரம் பொலிஸாருக்கு கட்டளை விடுத்ததை அடுத்து தருமபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.