காலி – பெந்தோட்டை – எல்பிட்டிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த வர்த்தக நிலையத்தின் முன் கதவின் ஊடாக குழாய் ஒன்று உள்ளே அனுப்பி அதனூடாக தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

