யோசிதவின் பாட்டி குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரல்

324 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவின் பாட்டியான டெய்ஸி போர்ரெஸ்ட் மீது மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

நிதிமோசடிகளுக்கு எதிரான காவல்துறை பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இதனை அறிவித்தது.

பணச்சலவை சட்டத்தின்கீழ் போர்ரெஸ்ட் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

யோசித்த ராஜபக்ச, ரத்மலானை பகுதியில் கொள்வனவு செய்ததாக கூறப்படும் 36 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுடன் கூடிய காணி தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.