இலங்கை இராணுவம் தமிழ் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
ஆங்கில மற்றும் சிங்கள இணையத்தளங்களுக்கு சமாந்தரமாக இந்த தமிழ் இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிறிசாந்த டி சில்வாவின் எண்ணக்கருவில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள தமிழ் வாசிப்பாளர்களின் நலன்கருதி இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

