காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

344 0

24-1435121644-law32-600நீதிமன்ற உத்தரவை மீறி கோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு விடுத்த கேரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கோட்டை காவல் துறையினரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்றது.
11 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், கோட்டை காவல் துறையினர் உரிய வகையில் நீதிமன்ற அறிவுறுத்தலை வழங்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.