டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி தீர்மானம்

465 0

டெங்கு ஒழிப்பு செயலணியினரை உடனடியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

டெங்கு நோய் வெகுவாக பரவுகின்றமை மற்றும் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி தலைமையில் நாளைய தினம் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்றால் 44 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர 115 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.