எழிலன் உள்ளிட்டவர்களின் வழக்கு ஆணி 29 க்கு ஒத்திவைப்பு

486 0

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டுள்ளலோர்  தொடர்பிலான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியாரான வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மீண்டும் ஆணி மாதம் 29 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

கடந்த தவணையில் இறுதி நேரத்தில் இவர்கள் சரணடையும் போது 58 ஆவது  படையணிக்கு பொறுப்பாக இருந்த இராணுவத்தளபதியான ஜெனரல் சர்வேந்திர சில்வாவை சாட்சியாக ஆயராக அழைப்பதற்கு விண்ணப்பம் செய்திருந்தோம் அதற்கான உத்தரவு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு சில சட்ட முறைமைகளின் படி அவரை இந்த நீதிமன்றுக்கு சாட்சியாக அழைக்க முடியாது என்று இன்று ஒரு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது

இந்த தீர்ப்புக்கமைய இந்த வழக்குகள் நடைபெறும்

இருப்பினும் அவரை நிலுவையில் உள்ள வேறு வழக்கின் மூலம் அவரை மன்றுக்கு கொண்டுவர முயற்ச்சிக்குறோம் அவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கிறார் எனவே சட்டரீதியாக மேன்கொண்டு நடவடிக்கை எடுக்க காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

அத்தோடு இந்த வழக்கு ஆணி மாதம் 29 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.