டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் நாளைய தினம் ஜனாதிபதி சிறப்பு பேச்சுவார்த்தை

216 0

டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவது தொடர்பில் மற்றும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவை உடனே அழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதன்படி , ஜனாதிபதியின் தலைமையில் நாளைய தினம் டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை 44ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் , அதில் 115 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.