அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை!

417 0

அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 35ம்அமர்வுகள் ஆரம்பாக உள்ளது.

இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiயின் பிரதிநிதி ஜூவான் மெண்டோஸ் இலங்கைக்குமேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் அடிப்படையில் இந்த அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த பரிந்துரைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரத்தைமீறிச் செயற்படுவதாகவும் என கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் அமைப்பினை உருவாக்கும் செயன்முறைக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின்உறுப்பினர்களையும் உள்வாங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளில் இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பில் கடுமையான மாற்றங்கள்செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.