ஐக்கிய தேசியக்கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான ஒற்றுமை அரசாங்க உடன்பாடு நிறைவுக்கு வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
எனினும் சர்வதேச அழுத்தத்தின் மத்தியில் இரண்டு கட்சிகளினதும் உறவு மேலும் நீடிக்கப்படும் என்று அரசாங்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இரண்டுக்கட்சிகளும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்கான உடன்படிக்கையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

