இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருப்போர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது மஹிந்த ராஜபக்சவின் பக்கம் செல்வதா என்பதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் எனக் கூறிக் கொண்டு வேறும் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
எதிர்காலத்தில் இவ்வாறு இரண்டு பக்கமும் கால் வைத்திருப்போர் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியாது.
அவ்வாறு தேவை என்றால் அவர்கள் குறித்த கட்சியில் இணைந்து கொண்டு அந்தக் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள வேண்டுமென துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

