ஆநார – ஆதாரவாக இன்னும் இரண்டு நாட்களில் திருத்தப்படும்

247 0

டிக்கோயா – மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிரதான பெயர் பதிவில் ஆதார என்று வரவேண்டிய இடத்தில் ஆநார என்று பதிவு செய்யப்பட்ட எழுத்துப்பிழையை இன்னும் இரண்டு நாட்களுள் முறையாக பதிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள எழுத்துப்பிழை தொடர்பாக குறிப்பிட்ட வைத்தியசாலையின் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது மத்திய மாகாண சுகாதார அமைச்சினால் இந்தப் பெயர் பதிவு 11 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்டதாகவும் காலையிலேயே இந்த எழுத்துப்பிழையைக் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது இந்த எழுத்துப் பிழையைச் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்தாத மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அதே டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொறிக்கப்பட்ட பெயர் பதிப்பையும் அங்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் பார்வையிட்டார்.