இலங்கையில் ராடார் வலையமைப்பொன்று உருவாக்குதற்கு ஜப்பானுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

285 0

இலங்கையில் ராடார் வலையமைப்பொன்று உருவாக்குதற்கு ஜப்பானுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இந்த ராடார் வலையமைப்பை உருவாக்கவுள்ளது.

இதற்காக அந்த நிறுவனம் 3.422 பில்லியன் ரூபாய்களை செலவிடுகின்றது.

தற்போதைய நிலையில், இலங்கை வானியல் சார் நிறுவனங்களுக்கு உரிய தொழினுட்ப ஏற்பாடுகள் இல்லாதநிலையில் இலங்கையில் ஏற்படும் வானியல் மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகவுமு; விரிவாகவும் தகவல்களை வெளியிட முடியாத நிலை உள்ளது.

அத்துடன், நாடு முழுவதையும் அவதானிக்கும் வகையிலான காலநிலை அவதானம் தொடர்பான தொழிநுட்ப கட்டமைப்பொன்று இலங்கையில் இல்லை.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றிற்கு அமைய ஜப்பான் இந்த ராடார் தொழிநுட்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.