வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்திக்கு 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

246 0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள், உள்நாட்டில் அகதிகளாக வாழ்கின்றவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

பெண் தலைமைதுவ குடும்பங்கள், விசேட தேவையுடைய குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மற்றும் அதிகம் வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் விவசாயம், கடற்தொழில், கால்நடை, சிறு கைத்தொழில், சுயதொழில் போன்ற துறைகளில் முக்கிய அவதானம் செலுத்தப்படுகின்றது.

அத்துடன் தொழிநுட்ப பரிமாற்றம், இயந்திரம் மூலமான தொழிற்துறை, மூலதனம், சந்தை வசதி போன்ற விடயங்களை ஆதரித்து செயற்படும் என மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உறுதியான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்பொன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.