புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் கைது

351 0

பிபிலை – நமிர்த்தகொடிய பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிபிலை காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 18, 32, 40 மற்றும் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.