சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

304 0

சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களனியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பௌத்த தர்மத்திற்கு அமைய கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று உலக மக்கள் அனைவரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக கிடைக்காத விடயங்கள் பௌத்த தர்மத்தின் ஊடாக கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.