இலங்கை வெசாக் நிகழ்வுகளில் இந்தியப் பிரதமர் மோடி

240 0

ஐ.நா.வெசாக் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை விமானநிலையத்தில் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இராணுவ மரியாதையுடனான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானநிலையத்தில் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிட்டார்.

இந்திய பிரதமரை வரவேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் , அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா , மலிக் சமர விக்ரம , மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்

இதனை தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பிலுள்ள கங்காராம விகாரைக்கு இன்று மாலை விஜயம் செய்தார்.

அங்கு கங்காராம விகாராதிபதி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அதன்பின்னர் அங்கு இடம்பெற்ற வழிபாட்டு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.