குப்பை கூளம் ஒன்றில் இருந்து ஹெரோயின் மீட்பு

391 0

கொழும்பு டி ஆர் விஜேவர்தன மாவத்தையில் குப்பை கூளம் ஒன்றில் இருந்து 3 கிலோ 600 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப் பொருள் 3 அரை கோடிக்கும் அதிகமான ரூபாய் பெறுமதியுடையது என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனை விற்பனை செய்துள்ள நபர்,குறித்த போதைப் பொருள் மற்றும் ஒரு நபர் எடுத்து செல்வதற்கு இவ்வாறு பொதி செய்து குப்பையில் மறைத்து வைத்துள்ள நிலையில், காவற்துறை அதனை மீட்டுள்ளதாக மருதானை காவற்துறை சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.