நிறைவேற்று ஜனாதிபதி முறை – மீண்டும் சிக்கல்

348 0

5525நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலான மாற்றுக்கருத்துக்கள் தொடர்பில் அரசியலமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்திவருவதால், அது தொடர்பில் முடிவெடுக்க நாடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளது என்று குழுவின் உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னர் இந்த விடயத்தில் முரண்பாடுகள் இருந்தபோதும் தற்போது இரண்டு கட்சிகளும் இதில் ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரசியலமைப்பு யோசனையில் மேற்கத்தைய நாடுகளின் பங்களிப்பும் இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
இந்தநிலையில், தேர்தல் சீர்திருத்தம், அதிகாரப்பரவலாக்கம் போன்ற விடயங்களில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அடுத்த தேர்தல் முறையின்கீழ் தேசியப்பட்டியல் முறை இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.