ஸ்ரீகோத்தாவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி பதவியை காவல்துறைமா அதிபர் ஏற்கவேண்டும் – உதய கம்மன்பில

380 0

udaya1காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, தமது பதவியை விட்டு விலகி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான  ஸ்ரீகோத்தாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பதவியை ஏற்கவேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.
மஹிந்த அணியினரின் பாதையாத்திரையின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமது பாதயாத்திரையை தடைசெய்யுமாறு கோரி, காவல்துறையினர்  நீதிமன்றத்தில் கோரிவருகின்றனர்.
எனினும் நீதிமன்றங்கள் தமது சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்காமல் காவல்துறையினரின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளன.
இந்தநிலையில் தமது பாதயாத்திரையை தடுக்க முடிந்தால், காவல்துறையினர், எல்லா கண்ணீர் புகைக்குண்டுகளையும், வரைகளையும் கொண்டு வரட்டும் என்று கம்மன்பில சவால் விடுத்துள்ளார்
காவல்துறையினர் எதனை செய்தாலும் தமது பாதயாத்திரையை தடுக்கமுடியாது என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.