தென்கொரிய கடலில் வீழ்ந்த இலங்கையர் தொடர்பில் விசாரணை

292 0

தென்கொரிய கடலில் இலங்கையர் ஒருவர் வீழ்ந்து காணாமல் போனமை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்பு பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மத்துகம யடதுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த ஜூன் மாதம் தொழில் நிமிர்த்தம் தென்கொரியா சென்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2ஆம் திகதி அவர் இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.