கனடாவின் கடும் மழை

310 0

கனடாவின் மெண்ரீல் (Montreal) நகரில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

தற்போதைய நிலையில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் வரையில் நீரிழ் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மொன்டோல் நகரில் தற்போது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 48 மணிநேரத்தில் இந்த காலநிலை தொடரும் எனவும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அந்த நாட்டின் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே பனிபொழிவு காரணமாக ஒட்டாவ (Ottawa) மற்றும் மெண்ரீல் (Montreal) நகரங்களை அண்மித்த நதிகளின் நீர்மட்டமும் உயர்வடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.