தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிகள் ஆரம்பம்

235 0

தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிகள் இடம்பெற்று வருகின்றன.

தென்கெரியாவின் முன்னாள் ஜனாதிபதியான பார்க் கீன்-ஹை (Park Geun hye) ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் முன்கூட்டியே இடம்பெறுகின்றது.

இடது சாரியான மூன் ஜா (Moon Jae) மற்றும் ஆன் சியோ – சூ (Ahn Cheol-soo) ஆகியோர் முக்கிய போட்டியாளராக கருதப்படுகின்றனர்.

வடகொரியாவுடன் பதற்றமான சூழ்நிலை நிலவும் இந்த தருணத்தில் இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுகின்றது.

வேட்பாளரான மூன் (Moon) வடகொரியாவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டும் என்ற கொள்ளை கொண்டவராகவும், சியோ (Cheol) அதற்கு எதிர் மாறான நிலைப்பாட்டை கொண்டவராகவும் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.