விசேட சுற்றிவளைப்பு – 453 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றல்

313 0

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்ப நடவடிக்கைகளின்போது 453 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

டி-56 ரக துப்பாக்கிகள் 25, 80 கைத்துப்பாக்கிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

இதுதவிர, பல்வேறு வகையிலான 2 ஆயிரத்து 893 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், 280 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 434 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.