எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் ஐ.தே.க ஆலோசனை

350 0

மே தினத்தின் வெற்றி மற்றும் எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் கட்சித் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறான எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.