களுத்துறையில் துப்பாக்கி சூட்டு – இளைஞன் பலி

331 0

களுத்துறை – வெலிப்பென்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பத்தில் இளைஞன் ஒருவர் பலியானார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உந்துருளியில் வந்த இனத்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பலியானவர் 24 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.