ஆலங்கட்டி மழை பெய்வதற்கான சாத்தியம்

324 0

இந்த மாதம் 12 ஆம் திகதிவரை ஆலங்கட்டி மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் குருணாகல் பிங்கிரிய பிரதேசத்தில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் தினங்களில் இலங்கையில் எந்த பாகத்திலும் ஆலங்கட்டி மழை பெய்யலாம் என கால நிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சுழற்காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது.

இதனால் மாத்தளை ரத்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட லுனுகலை தோட்டப்பகுதியல் ஆறு தொடர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

இந்த தொடர் குடியிருப்புக்களில் வசிக்கும் 40 குடுப்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.