யாழ்ப்பாணம் சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டு உந்துருளிகளில் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள் வெட்;டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது.
காயமடைந்த 3 பேரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

