நீதிமன்றத்தை அவமதித்தார் – கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

225 0

நீதிமன்றத்தை அவமதித்தாக கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது.

கீதா குமாரசிங்கவின் இரண்டு பிரஜாவுரிமைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்திருந்த தரப்பினரால் இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக கூறி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த மேன் முறையீட்டு நீதிமன்றம் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

எனினும், தீர்ப்பு வழங்கிய மறுதினமே கீதாகுமாரசிங்க நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

இந்த நிலையில் கீதா குமாரசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றத்திற்காகவும், கீதா குமாரசிங்கவின் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்தவர்களை ஊடகங்களின் முன்பாக தூற்றியமை தொடர்பிலும் சம்பமந்தப்பட்ட தரப்பினர் நாளைய தினம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முறைப்பாட்டாளர் தரப்பினர், கீதா குமாரசிங்க தமது இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கில் தம் சார்பான நியாயங்களை உறுதி செய்வதற்கான எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.