சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை  

248 0

சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சீன நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீனாவின் தென் பிராந்திய நகரான ஷென்ஸென் நகரத்தில் கடந்த கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிய நிலச்சரிவொன்று இடம்பெற்றது.

கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பகைள் என்பன ஒன்றாக சேகரிக்கப்பட்ட குவியல் ஒன்றே சரிவுக்கு உள்ளானது.

இதனால் 73 பொதுமக்கள் மரணமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய இரண்டு நிறுவன பிரதானிகளுக்கு 20 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருபது அரச அதிகாரிகளுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

குறித்த அதிகாரிகள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய குற்றத்திற்காகவே அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 23 சாதாரண குடிமக்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சீன நடைமுறைகளின் படி குப்பை சேகரிக்கும் இடம் ஒன்றில் அதிகபட்சமாக 95 மீற்றர் உயரத்திற்கு 4 மில்லியன் கன அடி குப்பைகளை சேமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சரிவிற்கு உள்ளான குறித்த குப்பை மேடு, 5.83 மில்லியன் சதுர மீற்றர் கன அடி கொள்ளளவில் 160 மீற்றர் உயரத்திற்கு அமைந்திருந்ததாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.