அமைச்சர்களின் பாவனைக்காக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் தவறும் இல்லை – அமைச்சர் எம் எச் ஏ ஹலீம்

236 0

அமைச்சர்களின் பாவனைக்காக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் எந்த தவறும் இல்லை என தபால் சேவை மற்றும் இஸ்லாமிய கலாச்சார அபிவிருத்தி அமைச்சர் எம் எச் ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது பழுதடைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய வாகனங்களை அமைச்சர்களுக்கு வழங்குவது தற்போதைய தேவையாக உள்ளதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டார்.