போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 82 மாணவிகள் விடுதலை

238 0

நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 82 மாணவிகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

ரைஜீரியாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாக இவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் சுமார் 20 ஆயிரம் பேர் வரையில் மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் பெண்கள் விடுதியில் இருந்து 276 மாணவிகளை போக்கோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றிருந்தனர்.

இதனை அடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களின் விடுதலையை வலியுறுத்திய நிபந்தனையின் அடிப்படையில் 21 மாணவிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மேலும் 82 மாணவிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.