கடுவலை நீதிமன்ற வளாக சூட்டு சம்பவம் – வல்கம லொக்கா கைது  

220 0

கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சமயங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்துக்குரியவரான பாதாள குழுவின் தொலவத்தகே ரவீந்திர பிரசாத் எனப்படும் வல்கம லொக்கா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தங்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

அவர் அதுருகிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு கடுவலை நீதவான் வளாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்வத்தில் சமயங் எனப்படுபவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.