புதையல் தோண்டிய 6 பேர் கைது

326 0

சியம்பலாண்டுவ – தொம்பகஹவெல பிரதேசத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் சிற்றூர்ந்து ஒன்றும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, கல்கிஸ்ஸ, பாணந்துறை மற்றும் பலாங்கொடை ஆகிய பிரதேசங்களை சேர்த்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, அநுராதப்புரம் – கலென்பிந்துனுவெல பிரதேசத்தில் புதையல் தோண்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காலி – ஹிங்கரக்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.