உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தியும் அரச சொத்துகளை விற்பனை செய்வதையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதையும் நிறுத்தக் கோரியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இம் மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் ரஞ்சித் சொய்யா நேற்று தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல்கள் பின்போடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாகின்றன. இதுவரை அரசாங்கம் இத்தேர்தலை நடத்த எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் இந்த அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரச சொத்துகள், காணிகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்களை ஒன்றுதிரட்டி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது

