புகையிலை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் பாவனை – ஆண்டுதோறும் 12 லட்சம் இந்தியர்கள் பலி

421 0

புகையிலை சார்ந்த உற்பத்திப் பொருட்களின் பாவனையினால் ஆண்டுதோறும் 12 லட்சம் இந்தியர்கள் பலியாவதாக ஆய்வென்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சுவாசப்பை கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்டுதோறும் இவ்வாறான ஒரு தொகையினர் மரணமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா முழுவதிலும் 14.9 சதவீதமானவர்கள் பீடி மற்றும் சிகரட் புகைப்பவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் புகையிலை பயன்பாட்டில் 70 முதல் 80 சதவீதம், பீடி தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

புகையிலை சார்ந்த பொருட்களின் பயன்பாட்டால் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

அவர்களில் 6 லட்சம் பீடியை பயன்படுத்துபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.