பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கை குழுவின் பேச்சுவார்த்தைகளின் படி தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் வரைவொன்று கடந்த 4 ஆம் திகதி நடவடிக்கை குழுவில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் கட்சிகளின் கருத்துகளை இம்மாதம் 23 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இக்கட்சிகளின் ஆய்வுக் கருத்துகளுடன் அரசியலமைப்புக்கான நடவடிக்கைக்குழு எதிர்வரும் 23 ஆம், 24 ஆம், 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் ஆய்வுகளின் படி பேச்சுவார்த்தைகளின் பின்னர் தயாரிக்கப்படும் நடவடிக்கை குழுவின் இறுதி அறிக்கை, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாறி தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு காணப்படும்.

