நேபால் ஜனாதிபதி பித்யா தேவி பாண்டாரி எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
நேபாள் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிசெய்துள்ளது.
அவர் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருகின்றார்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை பாண்டாரி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த பாண்டாரி இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

