ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமரிக்க நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டமையை அடுத்து, புதிய பங்கு கொள்வனவாளர் ஒருவரை தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது.
49 வீத பங்கு கொள்வனவுக்கு தயாராக இருந்த சன் பிரான்சிஸ்கோவின் டிபிஜி என்ற நிறுவனமே தமது முயற்சியில் இருந்து விலகியுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இதனை அறிவித்துள்ள போதும் டிபிஜி நிறுவனம் இன்னும் அது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே 2 பில்லியன் டொலர்கள் நட்டத்தி;ல் இயங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எமிரேட்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பில் எமிரேட்ஸ் நிறுவனம் இன்னும் தகவல் வெளியிடவில்லை.
ஏற்கனவே எமிரேட்ஸ் நிறுவனத்தின் கொள்வனவின்கீழ் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபமான நிறுவனமாக செயற்பட்டபோதும் 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனான தனிப்பட்ட குரோதம் காரணமாக அதனுடனான உடன்படிக்கை ரத்து செய்யப்பட்டது
ராஜபக்ச குடும்பத்துக்கு ஆசனங்களை ஒதுக்காமையே இதற்கான காரணமாகும்.

